மருதுபாண்டியர் 211-வது குருபூஜை விழா

  • சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சகோதரர்களின் 211-வது குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஏராளமானோர் அங்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

  • மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பல்வேறு கட்சி பிரமுகர்களும் குறிப்பிட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் போன்றவற்றின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. 

  • நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் தலைமையில் சூப்பிரண்டுகள் பன்னீர் செல்வம், ஈஸ்வரன், சேகர், அண்ணாத்துரை ஆகியோர் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

  • மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. 

  • கமுதியிலும் மருதுபாண்டியர் நினைவு தினவிழா நடைபெற்றது. அங்குள்ள மருது சிலைகளுக்கு அகமுடையார் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்து இனிப்புகள் வழங்கப்பட்டன. 

  • அ.தி.மு.க. சார்பில் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், கமுதி ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், கமுதி யூனியன் தலைவர் பாலு, பேரூராட்சி தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

  • தி.மு.க. சார்பில் மாநில விவசாய அணி துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல், ஒன்றிய பொறுப்பாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் சார்பில் பி.கே.கிருஷ்ணன், ராமமூர்த்தி, பொன்னுச்சாமி தேவர், சிதம்பர ராஜன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.















  • தேவர் ஜெயந்தி அன்று காளையார்க்கோவிலும்

  • திருப்பத்தூரும் செல்ல இருப்பதால் முக்குலத்து புலிகள் அமைப்பின் 

  • தலைமை அலுவலகத்திலையே மருது பாண்டியர் 

  • ஜெயந்தி கொண்டாடப்பட்டது ..